
Indian all-rounder Washington Sundar ruled out of Zimbabwe series due to shoulder injury (Image Source: Google)
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி வரும் 18ஆம் தேதி ஹராரேயில் நடக்கிறது.
இதற்கான இந்திய அணி நேற்று முன்தினம் ஹராரே சென்றடைந்து, நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கேஎல் ராகுல் வழிநடத்துவார். ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.