Advertisement

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் திறமை இந்திய வீரர்களிடம் உள்ளது - ராபின் உத்தப்பா!

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அனைவரையும் கையாளக்கூடிய திறமையான பேட்ஸ்மேன்கள், இந்திய அணியில் இருக்கிறார்கள் என்று நானும் நம்புகிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 07, 2023 • 20:58 PM
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் திறமை இந்திய வீரர்களிடம் உள்ளது - ராபின் உத்தப்பா!
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் திறமை இந்திய வீரர்களிடம் உள்ளது - ராபின் உத்தப்பா! (Image Source: Google)
Advertisement

இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றான சூப்பர்-4 சுற்றின் முதல் போட்டியில், வருகின்ற 10ஆம் தேதி கொழும்பு மைதானத்தில் பாகிஸ்தான் அணியை சந்தித்து விளையாட இருக்கிறது. இதற்கு முன் இந்த இரு அணிகள் முதல் சுற்றில் மோதிக்கொண்ட போட்டி மழையால் டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்தியா மட்டும் டாஸ் வென்று முதலில் தன் இன்னிங்ஸை விளையாடி முடித்தது. இதற்கு அடுத்து மழை நிற்காத காரணத்தினால், போட்டி டிராவில் முடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கை எடுத்துக்கொண்டால், டாப் ஆர்டர்கள் நான்கு பேரும் 66 ரன்களுக்கு விழுந்தார்கள். இரண்டு பேர் இடதுகை வேகப்பந்து வீச்சுக்கு விக்கெட்டை கொடுத்தார்கள். இரண்டு பேர் அதிவேகப்பந்து வீச்சுக்கு வைக்கட்டை கொடுத்தார்கள். அதற்குப் பின் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தார்கள். இந்த வகையில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் இசான் கிஷான் இடதுகை வீரராக மிடில் வரிசையில் நம்பிக்கை அளிப்பவராக கிடைத்திருக்கிறார்.

Trending


மறுபக்கம் பாகிஸ்தான் பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் அவர்களின் வேகப்பந்துவீச்சு மிக அருமையாக இருக்கிறது. அதே சமயத்தில் அவர்களுக்கு மிடில் ஓவர்களை வீச சிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகியது. மிடில் ஓவர்களில் அவர்களுடைய பந்துவீச்சாளர்களால் இந்திய பேட்ஸ்மேன்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் அபிஷேக் நாயர், “பாகிஸ்தானுக்கு வேகமாக வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் இருந்தால், எங்களிடம் வேகத்தை பயன்படுத்தி விளையாடக்கூடிய நல்ல பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி எப்படி பேட்டிங் செய்தார்? என்பதை நாம் பார்த்தோம். ஒருவரை விட ஒருவர் யாரும் பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை. இரு அணிகளும் மிகச் சிறப்பாக இருக்கின்றன. அழுத்தம் நிறைந்த நேரங்களில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது என்பதை நாம் பார்த்து வந்திருக்கிறோம். எதிர்காலத்திலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இதே தொடரும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

இவரது கருத்தை ஆமோதித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, “சரிதான். அவர்களிடம் சில வேகமான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய மூன்று வேகபந்துவீச்சாளர்களும் அற்புதமான ஃபார்மில் இருக்கிறார்கள். அப்படி எடுத்துக் கொண்டால், அவர்கள் அனைவரையும் கையாளக்கூடிய திறமையான பேட்ஸ்மேன்கள், இந்திய அணியில் இருக்கிறார்கள் என்று நானும் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement