
2022 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் ஏமாற்றம் கொடுக்கும் ஆண்டாகவே உள்ளது. இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து வெற்றியைப் பெற்றது. எனினும் டி20 உலக கோப்பையில் தோல்வியை தழுவி அரை இறுதியில் இருந்து இந்திய அணி வெளியேறியது.
இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் இந்திய அணியை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும் என்று முன்னாள் தேர்வு குழு உறுப்பினரும் , கிரிக்கெட் வீரருமான சபா கரிம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நமது கவனத்தை செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. முதலில் நமது ஒருநாள் மற்றும் டி20 அணியில் பிரச்சனை இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த பிரச்சனைகளை நீங்கள் சரி செய்தாலே போதும்.