
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியையும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணியையும் எதிர்கொண்டது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் மிக மிக சிறப்பாக செயல்பட்ட இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்பின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்ட இந்திய அணி, அப்போட்டியில் பேட்டிங்கில் சற்று தடுமாறினாலும், குல்தீப் யாதவ், ஜடேஜாவின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்று ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.
இந்தநிலையில், நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்ட இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பரஸ் ஹம்ப்ரே, சீனியர் வீரரான முகமது ஷமிக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்காததற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.