இணையத்தில் வைரலாகும் இந்திய வீரர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்!
தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய அணி வீரர்கள் படு உற்சாகத்துடன் புத்தாண்டை கொண்டாடி உள்ளனர், அவர்கள் செய்த சேட்டைகள் இணையத்தை கலக்கி வருகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்த வெற்றி 2021ஆம் ஆண்டில் இந்திய டெஸ்ட் அணிக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. டி20 உலகக்கோப்பை தொடர் தான் சரிவர அமையவில்லை. எனினும் மற்ற தொடர்களில் சிறப்பாகவே அமைந்தன. ஜனவரியில் ஆஸ்திரேலியாவின் கப்பா மற்றும் டிசம்பர் இறுதியில் செஞ்சூரியன் என 2 வரலாற்று வெற்றிகளை விராட் கோலி தலைமையிலான அணி வெற்றி பெற்றது.
Also Read
இதே உற்சாகத்துடன் இந்திய அணி வீரர்கள் நேற்று புத்தாண்டை கொண்டாடினர். இதற்காக அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலின் பபுளிலேயே சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு வீரர்கள் ஆட்டம், பாட்டம் என படு உற்சாகமாக கொண்டாடித் தீர்த்துள்ளனர்.
இதனை அனைத்து வீரர்களும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளனர். அவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விராட் கோலி, முகமது ஷமி போன்ற சீனியர் வீரர்கள், இளம் வீரர்களுடன் சேர்ந்து குதூகலமாக நடனம் ஆடியுள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now