Advertisement

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி!

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்ட இந்திய வீரர்கள் அனைவருக்கும் தற்போது 2ஆவது தவணை தடுப்பூசி செலுததப்படவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan July 07, 2021 • 15:13 PM
Indian Cricketers in England to Receive Second Dose of COVID-19 Vaccine
Indian Cricketers in England to Receive Second Dose of COVID-19 Vaccine (Image Source: Google)
Advertisement

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4ஆம் தேதி நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது.

இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக இந்திய வீரர்கள் மும்பையில் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்டனர். அதன்பின் அவர்கள் 16 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றனர்.

Trending


இந்நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் வருகிற ஜூம் 14ஆம் தேதி லண்டனில் ஒன்றுகூடுகிறார்கள். பின்னர் டர்ஹாமுக்கு சென்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 2ஆவது தவணை கரோனா தடுப்பூசியை இந்த வாரத்துக்குள் செலுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்ட இந்திய வீரர்கள் அனைவருமே இப்போது 2ஆவது தவணையை பெற தயாராக உள்ளனர்.

தற்போது விடுமுறையை கழித்து கொண்டிருக்கும் இந்திய வீரர்களுக்கு லண்டனில் ஜூலை 17ஆம் தேதி கரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement