Advertisement

ஐபிஎல் 2022: அணிகளின் முன்னோட்டம், சிறந்த வீரர்கள் & சதனைகள்!

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியின் முக்கிய உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஐபிஎல் சாதனைகள் குறித்த தகவலை இப்பதிவில் பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 24, 2022 • 16:09 PM
Indian Premier League (IPL 2022): Teams' Preview, Top Players & Past Records
Indian Premier League (IPL 2022): Teams' Preview, Top Players & Past Records (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

மேலும் நடப்பு சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் என இரு புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதால், மொத்தம் 74 ஆட்டங்களைக் கொண்ட பிரம்மாண்ட தொடராக நடைபெறவுள்ளது.

Trending


இந்நிலையில் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியின் முக்கிய உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஐபிஎல் சாதனைகள் குறித்த தகவலை இப்பதிவில் பார்ப்போம்.

மும்பை இந்தியன்ஸ்

முக்கிய இந்திய வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ஜஸ்பிரித் பும்ரா. இந்த சீசனின் ஏலத்தில் மிகவும் விலை உயர்ந்த இந்திய வீரரான விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கிஷானை 2 மில்லியன் டாலர்களுக்கு மும்பை வாங்கியது.

முன்னணி வெளிநாட்டு வீரர்கள்: கீரன் பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர்), ஃபேபியன் ஆலன் (வெஸ்ட் இண்டீஸ்), இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சருக்கு முழங்கை காயம் காரணமாக நடப்பு சீசனில் பங்கேற்கப் போவதில்லை என்பது தெரிந்து, மும்பை அணி அவரை ரூ.8 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ஐபிஎல் சாதனை: ஐந்து சாம்பியன் பட்டங்கள் (2013, 2015, 2017, 2019 மற்றும் 2020). 2010 இல் ரன்னர் அப்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

முக்கிய இந்திய வீரர்கள்: மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), மேலும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் திரும்ப வாங்கப்பட்டார்.

சிறந்த வெளிநாட்டு வீரர்கள்: மொயீன் அலி (இங்கிலாந்து ஆல்ரவுண்டர்), டுவைன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்), டெவோன் கான்வே (நியூசிலாந்து பேட்ஸ்மேன்).

ஐபிஎல் சாதனை: நான்கு சாம்பியன் பட்டங்கள் (2010, 2011, 2018, 2021) மற்றும் ஐந்து ரன்னர்-அப் முடிவுகள் (2008, 2012, 2013, 2015, 2019).

டெல்லி கேப்பிட்டல்ஸ்

முக்கிய இந்திய வீரர்கள்: ரிஷப் பந்த் (கேப்டன்), குல்தீப் யாதவ் மற்றும் யஷ் துல், கடந்த மாதம் மேற்கிந்திய தீவுகளில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஒரு துணிச்சலான இளம் பேட்ஸ்மேன்.

சிறந்த வெளிநாட்டு வீரர்கள்: டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்), லுங்கி இங்கிடி (தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்), முஸ்தாபிசுர் ரஹ்மான் (வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்).

ஐபிஎல் சாதனை: ரன்னர்-அப் (2020).

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

முக்கிய இந்திய வீரர்கள்: கே.எல். ராகுல் (கேப்டன்), அவேஷ் கான். இதில் வேகப்பந்து வீச்சாளர்  ஆவேஷ் கானை ஏலத்தில் ரூ.20 லட்சம் என்ற அடிப்படை விலையில் இருந்து ரூ.10 கோடிக்கு வாங்கப்பட்டார்.

முன்னணி வெளிநாட்டு வீரர்கள்: குயின்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்), ஜேசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர்), மார்கஸ் ஸ்டோனிஸ் (ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர்).

ஐபிஎல் சாதனை: தனது அறிமுக ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறது.

குஜராத் டைட்டன்ஸ்

முக்கிய இந்திய வீரர்கள்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மான் கில், முகமது ஷமி.

சிறந்த வெளிநாட்டு வீரர்கள்: லாக்கி ஃபெர்குசன் (நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான் லெக் ஸ்பின்னர்), மேத்யூ வேட் (ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்)

ஐபிஎல் சாதனை: தனது அறிமுக ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறது.

பஞ்சாப் கிங்ஸ்

முக்கிய இந்திய வீரர்கள்: மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஷாருக் கான். இதில் ஷாருக் கானை ரூ. 40 லட்சம் என்ற அடிப்படை விலையிலிருந்து ரூ.9 கோடிக்கு அணியில் சேர்ந்த ஒரு கடினமான பேட்ஸ்மேன். 

முன்னணி வெளிநாட்டு வீரர்கள்: லியாம் லிவிங்ஸ்டோன் (இங்கிலாந்து பேட்ஸ்மேன்), ஜானி பேர்ஸ்டோவ் (இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்), ககிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்).

ஐபிஎல் சாதனை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2014) என பெயரிடப்பட்ட போது இரண்டாம் இடம் பிடித்திருந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

முக்கிய இந்திய வீரர்கள்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஸ்வின்.

சிறந்த வெளிநாட்டு வீரர்கள்: ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்), நாதன் குல்டர் நைல்(ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்), ஷிம்ரோன் ஹெட்மியர் (வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்).

ஐபிஎல் சாதனை: மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னின் கீழ் 2008 ஆம் ஆண்டு தொடக்க ஐபிஎல் கோப்பையை வென்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

முக்கிய இந்திய வீரர்கள்: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி.

சிறந்த வெளிநாட்டு வீரர்கள்: பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்), சாம் பில்லிங்ஸ் (இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்), சுனில் நரைன் (வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர்).

ஐபிஎல் சாதனை: முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தலைமையில் 2012, 2014ஆகிய சீசன்களில் சாம்பியன் பட்டத்தை வென்றது. மேலும் ஈயான் மோர்கன் தலைமையில் கடந்த சீசனில் இரண்டாம் இடம் பிடித்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

முக்கிய இந்திய வீரர்கள்: புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக்.

சிறந்த வெளிநாட்டு வீரர்கள்: கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து பேட்ஸ்மேன், கேப்டன்), மார்கோ ஜான்சன் (தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு ஆல்ரவுண்டர்), ரொமாரியோ ஷெஃப்பர்ட் (வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்).

ஐபிஎல் சாதனை: டேவிட் வார்னர் தலைமையில் 2016ஆம் ஆண்டு ஐபிஎல் பட்டத்தை வென்றது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

முக்கிய இந்திய வீரர்கள்: விராட் கோலி, முகமது சிராஜ், ஹர்ஷல் படேல்.

முன்னணி வெளிநாட்டு வீரர்கள்: ஃபாஃப் டு பிளெசிஸ் (தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன், கோஹ்லிக்கு பதிலாக கேப்டன்). வனிந்து ஹசரங்கா (இலங்கை சுழற்பந்து வீச்சாளர்), கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர்).

ஐபிஎல் சாதனை: ஐபிஎல் தொடரின் 2009, 2011, 2016 ஆகிய மூன்று சீசன்களிலும் ரன்னர் அப் ஆனது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement