
வரும் 2023ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்டு தொடரில் விளையாட உள்ளது. டி20 போட்டி வரும் மூன்றாம் தேதி தொடங்க உள்ள நிலையில் அந்தத் தொடருக்கான இந்திய அணியை சேட்டன் சர்மா தலைமையிலான பழைய தேர்வு குழு உறுப்பினர்கள் அறிவிக்க உள்ளனர்.
புதிய தேர்வு குழு உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படாத நிலையில், இன்று மாலை இந்திய அணி அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ரோஹித் சர்மா காயத்திலிருந்து குணமடைந்த நிலையில், தொடர்ந்து 6 ஒருநாள் போட்டி நடைபெறுவதால், அவருக்கு டி20 போட்டியில் ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரும் முடிந்து இரண்டு நாட்களிலேயே நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரும் நடைபெறுகிறது. இதனால் இந்திய அணி தொடர்ந்து ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதால் டி20க்கு தனி அணியையும் ஒரு நாள் போட்டிக்கு தனி அணியையும் உருவாக்கும் முடிவில் தேர்வுக் குழுவினர் உள்ளனர்.