
Ashwin on Indian Team: ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆபார வெற்றியைப் பதிவு செய்தது. இதனையடுத்து இந்திய அணி எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில், முதல் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அர்ஷ்தீப் சிங்கிற்கு இடம் கிடைக்காதது பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், அர்ஷ்தீப் சிங்கை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கியது குறித்து முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான முதல் போட்டியில், ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்தார், அதே நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் சிவம் துபே ஆகியோர் கூடுதல் வேக பந்து வீச்சாளர்களாக இருந்தனர். மேலும், குல்தீப் யாதவ், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி என மூவருக்கும் இடம் கிடைத்தது.