
India’s Playing XI vs Ireland For 1st T20I; Likely Debuts For Umran Malik, Arshdeep Singh, Rahul Tew (Image Source: Google)
அயர்லாந்து சென்றுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஏற்கனவே முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால் இளம் வீரர்களை கொண்ட இந்த இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது.
இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 ஆட்டம் டப்ளின் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஹர்திக் பாண்டியா முதல் முறையாக இந்திய அணியை கேப்டனாக வழிநடத்த இருப்பதால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகம் உள்ளது.