
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது கரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மிகப்பெரிய டி20 உலகக் கோப்பைத் தொடரில் 16 அணிகள் கலந்துகொள்ள இருக்கின்றன.
அதில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில் 4 அணிகள் தகுதி சுற்று முடிவின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்னும் உலக கோப்பை தொடர் துவங்க இடையில் ஒரு மாதமே உள்ளதால் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகள் அனைத்தும் தங்களது கிரிக்கெட் அணியின் வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்துள்ளது.
இதன் காரணமாக ஏற்கனவே நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற அணிகள் தங்களது அணியை அறிவித்து விட்ட நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி ஜெய்ஷா தலைமையில் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் அதாவது இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் இந்த அணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.