
டி20 உலககோப்பை தொடர் முடிந்த உடன், இந்திய அணி வரும் நவம்பர் 18ஆம் தேதி முதல் நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதற்காக இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஜடேஜா, பும்ரா ஆகியோர் களமிறங்கவில்லை. இதே போன்று ருத்துராஜ் கெய்க்வாட்க்கும் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், ரிஷப் பந்த் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடக்க வீரராக இஷான் கிஷன் மற்றும் சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார், சஞ்சு சாம்சன் ஆகியோரும் நியூசிலாந்து டி20 அணியில் இடம் பிடித்துள்ளனர். வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்கும் அணிக்கு திரும்பியுள்ளார்.