
India Masters vs Australia Masters Dream11 Prediction, International Masters League T20: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரானது லீக் சுற்று போட்டிகள் முடிந்துள்ளன.
இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறிவுள்ளனர். இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த அரையிறுதி போட்டி ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
INM vs AUM: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்- இந்தியா மாஸ்டர்ஸ் vs ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ்
- இடம் - ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானம், ராய்ப்பூர்
- நேரம் - மார்ச் 13, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)