Advertisement

ஐபிஎல் தொடரிலிருந்து ஆர்ச்சர் விலகல்? அதிர்ச்சியில் ராஜஸ்தான் ரசிகர்கள்

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஒருநாள் மற்றும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேசகம் தான் என அந்த அணியின் கேப்டன் ஈயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Cricket Image for ஐபிஎல் தொடரிலிருந்து ஆர்ச்சர் விலகல்? அதிர்ச்சியில் ராஜஸ்தான் ரசிகர்கள்
Cricket Image for ஐபிஎல் தொடரிலிருந்து ஆர்ச்சர் விலகல்? அதிர்ச்சியில் ராஜஸ்தான் ரசிகர்கள் (Jofra Archer (Image Source: Google))
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 21, 2021 • 05:08 PM

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். தனது அசுர வேக பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காடச் செய்யும் இவர், சம காலத்தின் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக வர்ணிக்கப்படுகிறார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 21, 2021 • 05:08 PM

இந்நிலையில், இந்திய அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியின் போது ஜோஃப்ரா ஆர்ச்சர் முழங்கை பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்திய அணிக்கெதிரான் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று அந்த அணியின் கேப்டன் ஈயான் மோர்கன் தெரிவித்தார். 

Trending

இதுகுறித்து பேசிய மோர்கன், இப்போட்டியின் போது ஜோஃப்ரா ஆர்ச்சர் காயமடைந்துள்ளார். அவரது காயம் தீவிரமடைந்துள்ளதால், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பாரா? என்பது சந்தேகம்தான். அதேபோல் வரவுள்ள ஐபிஎல் தொடரிலும் ஆர்ச்சர் பங்கேற்பாரா என்பதும் சந்தேகம் தான் என்று தெரிவித்துள்ளார். 

மோர்கன் தெரிவித்துள்ள இத்தகவலால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஜோஃப்ரா ஆர்ச்சர், அந்த அணியின் மிகப்பெரும் பலமாக கருதப்படுகிறார். இதுவரை 35 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்ச்சர், 46 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 
 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement