
Injured Rohit, Jadeja In NCA To Regain Complete Fitness (Image Source: Google)
இந்தியா அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இத்தொடருக்கான இந்திய அணியும் நேற்று தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தது. இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இத்தொடரில் விளையாடவில்லை.
மேலும் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ரோஹித் நியமிக்கப்பட்டுள்ள சமயத்தில் அவர் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியது அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.