Advertisement

AUS vs PAK: டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் வீரர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் குர்ரன் ஷசாத் விலகியுள்ளார்.

Advertisement
AUS vs PAK: டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் வீரர்!
AUS vs PAK: டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் வீரர்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 21, 2023 • 12:49 PM

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 21, 2023 • 12:49 PM

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடரிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் குர்ரம் ஷாசாத் விலகியுள்ளார். இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குர்ரம் ஷசாத் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகுகிறார். 

Trending

மேலும் அவர் உடனடியாக லாகூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். அங்கு அவர் தனது காயத்திற்கான சிகிச்சையை பெற்று பயிற்சி மேற்கொள்ளவுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவருக்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அணியில் முகமது வாசிம் ஜூனியர் உள்ளதால் அவர் பாகிஸ்தான் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குர்ரம் ஷாசாத் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement