
Inoka Ranaweera's four-wicket haul goes in vain as India seal victory in the first ODI against Sri L (Image Source: Google)
இந்திய மகளிர் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் ஆடிவருகிறது. டி20 தொடரை இந்திய மகளிர் அணி 2-1 என வென்றது.
அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியில் தொடக்க வீராங்கனை ஹாசினி பெரேரா(37), நிலாக்ஷி டி சில்வா(43), மாதவி(28) ஆகிய மூவரைத்தவிர வேறும் யாருமே அவர்கள் அளவிற்குக்கூட ரன் அடிக்கவில்லை. அதனால் 48.2 ஓவரில் வெறும் 171 ரன்களுக்கு இலங்கை மகளிர் அணி ஆல் அவுட்டானது.