ஸ்ரேயாஸ் அணிக்கு திரும்பியது மிகப்பெரும் பலம் - முகமது கைஃப்!
14ஆவது ஐபிஎல் சீசனின் 2ஆம் பாதியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் இணைந்திருப்பது பெரிய பலமாக இருக்கும் என அணியின் துணைப் பயிற்சியாளர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல் பாதியோடு ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், தற்போது வரும் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போதுள்ள புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வரும் 22ஆம் தேதி எதிர்கொள்கிறது.
இந்நிலையில் ஐபிஎல் இரண்டாம் பாதியில் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்திருப்பது அணிக்கு பெரும் பலமாக இருக்கும் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பயிற்சியாளர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கைஃப் "முதல் பாதி ஐபிஎல்-க்குப் பிறகு பெரிய இடைவேளை இருக்கிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக பெரும்பாலான வீரர்கள் தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றனர். முதல் பாதியில் விளையாடிய அணியிலிருந்து நிறைய மாற்றங்கள் இல்லை.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
எனினும், அணியில் ஷ்ரேயஸ் ஐயர் இணைந்திருப்பது எங்களுக்குப் பெரிய பலம். அவர் சிறந்த வீரர். கடந்த 2 சீசன்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்த சீசனில் களமிறங்குவதை எதிர்நோக்கி இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now