
Chennai Super Kings opt to bowl (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இன்றைய லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
இன்றைய போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் தனது 200 வது போட்டியில் களமிறங்குகிறார். மேலும் ஐபிஎல் தொடரில் 200 போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார்.