
IPL 2021: CSK restrict RCB by 156/6 in 20 overs (Image Source: Google)
அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் இன்று நடபெறும் 35ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி - தேவ்தத் படிக்கல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது.
இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிவந்த இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். பின் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ஏபிடி வில்லியர்ஸ் 12 ரன்களில் ஷர்துல் தாக்கூரிடம் விக்கெட்டை இழந்தார்.