Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2021: ஒரு ரன்னில் வெற்றி கனியை பறித்த கோலி & கோ; வாழ்த்து மழையில் ஆர்சிபி!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி த்ரில் வெற்றி.

Bharathi Kannan
By Bharathi Kannan April 28, 2021 • 00:59 AM
IPL 2021: De Villiers, Bowlers Help Bangalore Beat Delhi By 1 Run
IPL 2021: De Villiers, Bowlers Help Bangalore Beat Delhi By 1 Run (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Trending


இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு விராட் கோலி, தேவ்தட் படிக்கல், மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், கடைசி நேரத்தில் டிவில்லியர்ஸ் காட்டடி அடித்து 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதன்மூலம்  மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 171 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி அணிக்கு துவக்க வீரரான ஷிகர் தவான் 6 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார், மற்றொரு துவக்க வீரரான ப்ரித்வி ஷா 21 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்னிலும், ஸ்டோய்னிஸ் 22 ரன்னிலும் நடையை கட்டினர்.

இதன்பிறகு கூட்டணி சேர்ந்த ரிஷப் பண்ட் – சிம்ரன் ஹெட்மையர் ஜோடி பெங்களூர் அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டது. இதில் குறிப்பாக ஹெட்மையர் 23 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் கடைசி ஒரு ஓவருக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலை டெல்லி அணிக்கு ஏற்பட்டது.

வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் முகமது சிராஜ் வீசிய கடைசி ஓவரில் டெல்லி அணியால் இரண்டு பவுண்டரிகள் அடித்து 10 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் டெல்லி அணி வெறும் 1 ரன்னில் வெற்றியை தவறவிட்டுள்ளது. பெங்களூர் அணி சார்பில் ஹர்சல் பட்டேல் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், கெய்ல் ஜேமிசன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்தநிலையில், பரபரப்பான இந்த போட்டியில் வெறும் 1 ரன்னில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ள பெங்களூர் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. அதே போல் பெங்களூர் அணியின் இந்த வெற்றிக்கு காரணமான முகமது சிராஜ், டிவில்லியர்ஸ் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement