Advertisement

ஐபிஎல் 2021: ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement
IPL 2021: Delhi Capitals beat Sunrisers Hyderabad by 8 wickets
IPL 2021: Delhi Capitals beat Sunrisers Hyderabad by 8 wickets (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 22, 2021 • 11:07 PM

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 33ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 22, 2021 • 11:07 PM

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. 

Trending

அந்த அணியில் அதிகபட்சமாக அப்துல் சமத் 28 ரன்களைச் சேர்த்தார். டெல்லி அணி தரப்பில் காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளை வீத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியில் பிரித்வி ஷா 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் - ஸ்ரேயாஸ் ஐயர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவான் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பந்த் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. 

இதனால் 17.5 ஓவர்களிலேயே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 47 ரன்களையும் , ரிஷப் பந்த் 35 ரன்களையும் சேர்த்தனர். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 14 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement