
IPL 2021: Delhi Capitals Leave For Dubai (Image Source: Google)
கரோனா தொற்றால் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடந்த வாரமே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் 14ஆவது சீசனின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டது. இதனை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிசெய்துள்ளது.