கரோனா அச்சுறுத்தல்: ராஜஸ்தான் அணியை தொடர்ந்து கரோனா நிதியுதவி வழங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிதியுதவி வழங்கியுள்ளது.
இதியாவில் கரோனா 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் இடம் இல்லாமல், அவரச உதவிக்கு முக்கியமான ஆக்சிஜன் கிடைப்பதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்க உதவிக்கரம் நீட்டியுள்ளன.
இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ராஜஸ்தான் ராயஸ்ல் அணி ரூ.7.5 கோடி நிதியுதவி வழங்கியது. இந்த வரிசையில் தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இணைந்துள்ளது.
Trending
ANNOUNCEMENT
— Delhi Capitals (Stay Home. Wear Double Masks) (@DelhiCapitals) April 29, 2021
Delhi Capitals and its patrons, the @JSWFoundation & GMR Varalakshmi Foundation are offering financial support amounting to INR 1.5 Cr to NCR based NGOs, the @Hemkunt_Fdn and the @UdayFoundation. #DilDikhaDilli #YehHaiNayiDilli @DelhiAirport pic.twitter.com/5brZ3o2NnP
இதுகுறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரூ.1.5 கோடி ரூபாய் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now