Advertisement

ஐபிஎல் திருவிழா 2021: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன்!

மும்பை வான்கேடே மைதானத்தில்  இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், டெல்லி

Advertisement
IPL 2021, Delhi Capitals vs Punjab Kings, 11th Match – Blitzpools Fantasy XI Tips
IPL 2021, Delhi Capitals vs Punjab Kings, 11th Match – Blitzpools Fantasy XI Tips (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 18, 2021 • 02:04 PM

மும்பை வான்கேடே மைதானத்தில்  இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 18, 2021 • 02:04 PM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் : டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
  • இடம்:  வான்கேடே மைதானம், மும்பை 
  • நேரம்: இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

பஞ்சாப் கிங்ஸ்

இமாலய ஸ்கோர், அதிரடி சிக்ஸர் மழை என சீசனில் களமிறங்கிய முதல் போட்டியில் அமர்க்களப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் இரண்டாவது போட்டியில் சென்னையின் பந்து வீச்சில் சுருண்டது. அணியின் முன் வரிசை வீரர்கள் சிறு பின்னடைவைச் சந்தித்துள்ளனர். இருப்பினும் கே.எல்.ராகுல், கெய்ல், ஹூடா, மயங்க் அகர்வால் என அணியின் முன்வரிசை வீரர்கள் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் வல்லமை கொண்டவர்களாகவே பார்க்கப்படுகின்றன. 

நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படும் பூரன் அடுத்தடுத்து இரு போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளது அணிக்கு பலவீனமே. இந்நிலையில் அவருக்கு பதில் உலகின் முதல் நிலை டி20 வீரர் டேவிட் மலன் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாருக்கான் நடு வரிசையில் அணிக்கு அதிரடி அஸ்திரமாக உருவெடுத்துள்ளார். 

பந்து வீச்சைப் பொறுத்தவரையில் இந்தியாவின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஷமியின் அனுபவம் அசுர பலமாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பக்க பலமாக அர்ஷ்தீப் சிங் உள்ளார். பெருந்தொகைக்கு ஏலமெடுக்கப்பட்ட ஜை ரிச்சர்ட்ஸன், ரைலி மெரிடித் ஆகியோர் எதிர்பார்த்த அளவு பங்களிப்பைக் கொடுக்காதது பஞ்சாப் அணிக்கு பெரும் பின்னடைவு. முருகன் அஷ்வினும், மெரிடித்தும் அதிகளவில் ரன்களை விட்டுக் கொடுத்திருப்பதால் இளம் வீரர் ரவி பிஷ்னோய், ஹென்ரிக்ஸ் ஆகியோர் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

சென்னை அணியுடனான போட்டியில் அசத்தலான வெற்றி பெற்ற டெல்லி அணி, ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் முக்கிய தருணங்களில் சுதாரிக்க தவறி ஆட்டத்தைக் கோட்டை விட்டது. முதல் போட்டியில் சென்னை பந்துவீச்சாளர்களை பவுண்டரி சிக்ஸர்களால் துவம்சம் செய்த தவன், பிரித்வி ஷா இரண்டாம் போட்டியில் சறுக்கலை சந்தித்தனர். விக்கெட்டுகள் சரியும் பட்சத்தில் ஆட்டத்தை நிலைப்படுத்தும் துடுப்பாக உதவும் ரஹானேவும் முந்தைய போட்டியில் சோபிக்காதது பின்னடைவு. நடுவரிசை வீரரான கேப்டன் பந்த்தின் ஃபார்ம் அணிக்கு பெரும்பலம். 

ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் இரு போட்டிகளில் வெற்றிக்கு வித்திடும் வகையில் அணிக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் நடு வரிசையை பலப்படுத்த அவருக்கு பதில் ஹெட்மெயர் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்து வீச்சில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அமித் மிஸ்ராவுக்கு பதில் களமிறக்கப்பட்ட லலித் யாதவ் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆவேஷ் கான், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் ஆறுதலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வெளிநாட்டு வீரர் டாம் கரண் சோபிக்க தவறிய நிலையில் அவர் மீண்டும் அணியில் இடம் பிடிப்பது கடினமே. 

ரபாடா ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் யார்கர்களை வீசத் தவறியது அணிக்கு பின்னடைவாக இருந்தது. இருப்பினும் எதிரணியினருக்கு அச்சுறுத்தலான பவுலராக அவர் பார்க்கப்படுகிறார். ரபடாவின் வேக இரட்டையராக கூறப்படும் நோர்ட்ஜே, டாம் கரணுக்கு பதிலாக களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

நேருக்கு நேர்

ஐபிஎல் தொடரில் இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 26 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில். பஞ்சாப் அணி 15 போட்டிகளில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 11 போட்டிகளில்  வெற்றி பெற்றுள்ளது. 

உத்தேச அணி

பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், நிகோலஸ் பூரன்/ டேவிட் மாலன், தீபக் ஹூடா, ஷாருக் கான், ஜெய் ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், அர்ஷ்தீப் சிங், முகமது சமி, முருகன் அஸ்வின்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஷிகர் தவான், பிரித்வி ஷா, அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிறிஸ் வோக்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், லலித் யாதவ், ககிசோ ரபாடா, ஆன்ட்ரிச் நோர்ட்ஜே, ஆவேஷ் கான்.
 
பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் : கே.எல்.ராகுல், ரிஷப் பந்த்
  • பேட்ஸ்மேன்கள் : தவான், பிரித்வி ஷா, ஷாரூக் கான், கிறிஸ் கெய்ல்
  • ஆல்ரவுண்டர்கள்: கிறிஸ் வோக்ஸ், தீபக் ஹூடா
  • பவுளர்கள்: முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரபாடா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement