
IPL 2021: Harpreet, Bishnoi spin web as Punjab Kings defeat RCB by 34 runs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச தீர்மானித்து விளையாடியது.
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணிக்கு சாதகமான ஸ்கோரை நிர்ணயித்தனர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை சேர்த்தது . பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 92 ரன்களையும், கிறிஸ் கெய்ல் 46 ரன்களையும் எடுத்தனர்.