ஐபிஎல் 2021: பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு தொற்று பரவியது எப்பது?
பயோ பபுள் சூழலிருந்த கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா தொற்று பரவியது எப்படி என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுங்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடுமையான பாதுகாப்புடன் நடைபெற்று வந்தது.
ஆனால் பயோ பபுள் சூழலில் இருந்த கிரிக்கெட் வீரர்களுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. இந்நிலையில் பயோ பபுள் சூழலில் இருந்த வீரர்களுக்கு எப்படி தொற்று பரவியது என்ற சந்தேகம் அனைவரது மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வந்தது.
Trending
இந்நிலையில் டெல்லி மைதானத்தில் விளையாட சென்றிருந்த கிரிக்கெட் வீரர்கள் அங்குள்ள மைதான பராமரிப்பாளர்கள் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரசைர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.
மேலும் வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக, அவர்கள் தங்கியிருந்த விடுதியின் அருகிலேயே மைதானங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இச்சமயத்தில் தான் வீரர்களுடன் மைதான பராமரிப்பாளர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயோ பபுள் சூழலில் இருக்கும் வீரர்கள் எப்படி ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர் என்ற கேள்வி தற்போது எழு தொடங்கியுள்ளது. மேலும் இதுகுறித்து பிசிசிஐ விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now