
IPL 2021: KKR restrict Delhi Capitals by 135 runs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பிரித்வி ஷா - ஷிகர் தவான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுக்க முயற்சித்தனர். ஆனால் 18 ரன்களில் பிரித்வி ஷா ஆட்டமிழக்க, அடுத்த வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸும் 18 ரன்களோடு வெளியேறினார்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிகர் தவானும் 36 ரன்களோடு வெளியேற, அடுத்து வந்த ரிஷப் பந்தும் 6 ரன்களில் வெளியேறியதால் அந்த அணி தடுமாறியது.