 
                                                    ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 11ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து. 
 
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
 
பின்னர் 69 ரன்களில் மயாங்க் அகர்வால் ஆட்டமிழக்க, பின்னர் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கே.எல்.ராகுலும் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர்.
 
இதையடுத்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல் 11 ரன்களிலும், நிக்கோலஸ் பூரான் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய தீபக் ஹூடா, ஷாரூக் கான் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. 
 
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களை குவித்து. 
 
 
                         
                                                 
                             
                         
                         
                         
                        