
IPL 2021, MI vs RR – Blitzpools Fantasy XI Tips, Prediction & Pitch Report (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள 24 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள இரு அணிகளும் தலா 2 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன. எனவே, 3வது வெற்றிக்காக இரு அணிகளுமே தீவிர முயற்சியில் ஈடுபடும் என்பதால் இப் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் : மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
- இடம் : அருண் ஜெட்லி மைதானம், டெல்லி.
- நேரம் : மாலை 3.30 மணி