
IPL 2021: Mumbai Indians beat SRH by 13 runs (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி டி காக், பொல்லார்ட் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களைச் சேர்த்தது, அந்த அணியில் அதிகபட்சமாக டி காக் 42 ரன்களையும், பொல்லார்ட் 35 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் வார்னர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பேர்ஸ்டோவ் 43 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னரும் 33 ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.