
IPL 2021 : Mumbai Indians vs Kolkata Knight Riders match preview (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இந்தத் தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டம், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. முதல் போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியைச் சந்தித்த மும்பை அணி, இம்முறை வெற்றியைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
அதேபோல, ஹைதராபாத் அணியைத் தோற்கடித்த கொல்கத்தா அணி, வெற்றிக் கணக்கைத் தக்கவைத்திட முயற்சி செய்யும். ஆனால், ஐந்து முறை சாம்பியனான மும்பையை எதிர்கொள்வதும் எளிது கிடையாது. இரு அணிகளும் வெற்றிக்குக் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது.