
IPL 2021: PBKS set a target on 123 (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 21ஆவது லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி, பஞ்சாப் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச தீர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு வழக்கம் போல் கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் இணை களமிறங்கியது. இதில் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கே.எல்.ராகுல் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த கிறிஸ் கெய்ல் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் களமிறங்கிய தீபக் ஹூடா, நிக்கோலஸ், பூரான் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயாங்க் அகர்வாலும் 31 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.