
IPL 2021: Pollard Powers Mumbai To A Thrilling Last Ball Win Over Chennai (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 27ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மொயீன் அலி, ஃபாப் டூ பிளெஸிஸ், அம்பத்தி ராயுடு ஆகியோர் அரைசதம் கடந்து இமாலய இலக்கை நிர்ணயிக்க உதவினர்.
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை எடுத்தது. சிஎஸ்கேவில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 72 ரன்களையும், மொயீன் அலி 58 ரன்களையும், டூ பிளெஸிஸ் 50 ரன்களையும் சேர்த்தனர்.