
IPL 2021: Punjab kings need 132 runs to win (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச மூடிவுசெய்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு வழக்கம்போல் டி காக், இஷான் கிஷான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பியது.
பின்னர் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா அரைசதம் கடந்து அசத்தினார்.