ஐபிஎல் 2021: ஹாட்ரிக் நாயகனை தட்டித் தூக்கிய பஞ்சாப் கிங்ஸ் !
ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளுக்காக பஞ்சாப் கிங்ஸ் அணி, ஆஸ்திரேலியவின் நாதன் எல்லீஸை ஒப்பந்தம் செய்துள்ளது.

கரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குகின்றன. மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளன. இத்தொடரில் பங்கேற்பதற்காக சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் அமீரகம் சென்றுவிட்ட நிலையில், மற்ற அணிகளும் ஐபிஎல்லுக்காக தயாராகிவருகின்றன.
சில வெளிநாட்டு வீரர்கள், ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் ஆடாதது சில அணிகளுக்கு பாதிப்பாக அமையும். அந்தவகையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடிவந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித் மற்றும் ஜெய் ரிச்சர்ட்ஸன் ஆகிய இருவரும் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளனர்.
Trending
எனவே அவர்களுக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லீஸை பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அண்மையில் வங்கதேச சுற்றுப்பயணத்தின் போது டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமான எல்லிஸ், தனது அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பிகபேஷ் லீக்கில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடி ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த எல்லிஸ், டி20 உலக கோப்பைக்கான அணியிலும் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில், அவர் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now