ஐபிஎல் திருவிழா 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சப் கிங்ஸ்; போட்டி முன்னோட்டம் & ஃபெண்டஸி லெவன்!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்கிய ரசிக
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்கிய ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது.இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.
கே.எல். ராகுல், மயாங்க் அகர்வால், கிறிஸ் கெயில், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன் (அ) டேவிட் மாலன், ஷாருக் கான் இந்தப் பேட்டிங் வரிசைதான் இன்றைய போட்டியில் சென்னை அணியின் முதல் பிரச்சினை.
Trending
முதல் ஆறு ஓவர்களான பவர்-ப்ளேயில் விக்கெட் வீழ்த்த சிரமப்பட்டு வரும் சென்னை, இந்தப் போட்டியில் ஜேசன் அல்லது இங்கிடியைக் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி அணியுடனான கடந்த போட்டியில் சிஎஸ்கே பேட்டிங்கில் மோசமான தொடக்கத்தைத்தான் அளித்தது. இப்படி பவர்-ப்ளேயில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்படாவிட்டால் சென்னை அணியின் தற்போதைய நிலைமையில் எந்த மாற்றமும் இருக்காது.
ஒரு போட்டியை வைத்து மட்டும் அணியின் நிறைகுறைகளை கணக்கிட முடியாது என்றாலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது அனைத்து பிரிவுகளிலும் சொதப்பி இருந்தது நாம் அறிந்த ஒன்றே.
அதனால்தான் சிஎஸ்கேவுக்கு மிகவும் மோசமான தொடராக அது அமைந்தது. இப்போதும் இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு கூட, ஒரு சிரத்தையான ஆட்டத்தை சென்னை அணி வீரர்கள் வெளிப்படுத்தவில்லை என்றால் இந்தத் தொடரின் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியே இருக்க நேரிடும்.
மும்பை வான்கடே ஆடுகளம், என்னதான் பேட்டிங்குக்கு ஒத்துழைப்பதாக இருந்தாலும் விக்கெட் டேக்கிங் ஸிப்பினர்கள் சென்னைக்கு நிச்சயம் தேவை. கிருஷ்ணப்பா கவுதம், சாய் கிஷோர், இம்ரான் தாஹிர் ஆகியோரை அணியில் சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்.
பஞ்சாப் அணி தனது உறுதியான பேட்டிங் மூலம் எதிரணியை மிரட்டினாலும், அதன் பந்துவீச்சு என்பது 221 ரன்களையே எளிதில் விட்டுக்கொடுக்கும் அளவிற்குதான் இருந்துவருகிறது. டி20 போட்டிகளில் வாணவேடிக்கை காட்டும் பேட்ஸ்மேன்கள் தான் முக்கியம் என்று கூறப்பட்டாலும், பந்துவீச்சும் ஒரு போட்டிக்கு எவ்வளவு முக்கியம் என்பதற்கு சான்று பஞ்சாப் அணிதான். அதிரடியான வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே பஞ்சாப் அணிக்கு விடிவுகாலம். காயம் காரணமாக முகமது ஷமி இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
ரெய்னாவின் வருகைதான் சென்னை அணியை மிடில் ஓவர்களில் எழுச்சி பெற வைத்துள்ளது. பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நல்ல தொடக்கத்தை சென்னை வீரர்கள் அமைப்பார்கள் ஆனால் சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும்.
நேருக்கு நேர்
ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 முறையும், பஞ்சாப் கிங்ஸ் அணி 9 முறையும் வெற்றியைப் பெற்றுள்ளது. வெற்றி விகிதத்தில் சென்னை அணி வலிமையாக தோன்றினாலும், தற்போதுள்ள பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசையை சமாளித்து வெற்றியை ஈட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
உத்தேச அணி விவரம்
சிஎஸ்கே: ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயூடு, சுரேஷ் ரெய்னா, டூ பிளெசிஸ், எம்.எஸ்.தோனி, மொயீன் அலி, சாம் கரன், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார்.
பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக் கான், ஜெய் ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித்/ கிறிஸ் ஜோர்டன், அர்ஷ்தீப் சிங், முகமது சமி, முருகன் அஸ்வின்/ ரவி பிஸ்னோய்.
பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன் அணி
- விக்கெட் கீப்பர் - கே.எல்.ராகுல், நிக்கோலஸ் பூரான்
- பேட்ஸ்மேன்கள் - மயாங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, சுரேஷ் ரெய்னா
- ஆல்ரவுண்டர்கள்- சாம் கரன், ரவீந்திர ஜடேஜா
- பவுளர்கள் - முகமது ஷமி, சர்துல் தாக்கூர், ஜெய் ரிட்சர்ட்சன்.
Win Big, Make Your Cricket Tales Now