IPL 2021 : Rajasthan Royals beat CSK by 7 wickets (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 47ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணி ருதுராஜ் கெய்க்வாட்டின் அபாரமான சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கெய்க்வாட் 101 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - எவின் லூயிஸ் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கியது. இதில் லூயிஸ் 27 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.