
IPL 2021: Rajasthan Royals need 148 runs to win (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 7ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் இணை களமிறங்கியது. இதில் பிரித்வி ஷா 2 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஷிகர் தவான் 9 ரன்களிலும், அஜிங்கியா ரஹானே 8 ரன்களிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் களமிறங்கிய அணியின் கேப்டன் ரிஷப் பந்த் சற்று நிதானமாக விளையாடி அரைசதம் கடந்து அணிக்கு உதவினர். பின் பந்த்தும் 51 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.