
IPL 2021: Rashid and Nabi have joined team and are undergoing quarantine, says SRH official (Image Source: Google)
கரோனா தொற்றால் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது, செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் முகமது நபி இருவரும் இன்று அமீரகம் வந்தடைந்தனர். மேலும் அவர்கள் இருவரும் ஆறு நாள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு, சக அணியினருடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.
முன்னதாக, டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்கும்போது தனது கருத்தைக் கேட்காமலே தன்னைக் கேப்டனாக அறிவித்ததால், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக ரஷித் கான் அறிவித்திருந்தார்.