டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்தே நீடிப்பார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்தே நீடிப்பார் என அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய 14 ஆவது சீசன் ஐபிஎல் தொடரானின் முதல் பாதி முடிந்த நிலையில், இரண்டாம் பாதி தொடங்கிய போது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கரோனா பாதிப்பு காரணமாக இந்த தொடரானது பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மீதமுள்ள 31 போட்டிகள் வரும் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கு டெல்லி அணியின் கேப்டனாக யார் செயல்படுவார்கள் ? என்று கேள்வி சமூக வலைத்தளத்தில் அதிக அளவில் எழுந்தன. ஏனெனில் இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்த போது அந்த தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார்.
Trending
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கு டெல்லி அணியின் கேப்டனாக யார் செயல்படுவார்கள் ? என்று கேள்வி சமூக வலைத்தளத்தில் அதிக அளவில் எழுந்தன. ஏனெனில் இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்த போது அந்த தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார்.
இந்நிலையில் தற்போது காயத்திலிருந்து குணமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பி உள்ளதால் ரிஷப் பந்த் அல்லது ஸ்ரேயாஸ் ஆகிய இருவரில் யார் எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்படுவார்கள் ? என்ற கேள்வி இருந்தது.
OFFICIAL STATEMENT
— Delhi Capitals (@DelhiCapitals) September 16, 2021
JSW-GMR co-owned Delhi Capitals today announced that Rishabh Pant will continue as Captain for the remainder of the #IPL2021 season.#YehHaiNayiDilli pic.twitter.com/yTp2CZHqYj
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்நிலையில் தற்போது இந்த தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலும் ரிஷப் பந்த் தான் கேப்டனாக தொடர்வார் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இச்செய்தியை ரிஷப் பந்தின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now