
IPL 2021: Sanju Samson on fire; RR set a target for 165 (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 40ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எவின் லூயீஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சஞ்சு சாம்சன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அவரைத் தொடர்ந்து வந்த லியாம் லிவிங்ஸ்டோன் 4 ரன்களில் நடையைக் கட்டினார்.