
IPL 2021 second phase start today, CSK vs MI Battle (Image Source: Google)
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கியது. இத்தொடரில் 29 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் மே மாத தொடக்கத்தில் சில வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுட்க்டு போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது.
இன்று நடைபெறும் முதல் லீக் (30ஆவது)ஆட்டத்தில் நடப்புசாம்பியனான மும்பை இந்தியன்ஸ், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது.
நடப்பு சீசனில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, 5 வெற்றி, 2 தோல்வி என மொத்தம் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது.