ஐபிஎல் 2021: தனி விமானம் மூலம் நாடு திரும்பிய ஷகிப், முஸ்தபிசூர்!
வங்கதேச அணியைச் சேர்ந்த ஷகிப் அல் ஹசன், முஸ்தாபிசூர் ரஹ்மான் தனி விமானம் மூலம் நாடு திரும்பினர்.

IPL 2021: Shakib Al Hasan, Mustafizur Rahman Reach Bangladesh In Chartered Flight (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வங்கதேச அணியைச் சேர்ந்த ஷகிப் அல் ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் தனி விமானம் மூலம் இன்று நாடு திரும்பினர்.
Trending
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஷகிப் அல் ஹசன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும், முஸ்தபிசூர் ரஹ்மான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினர்.
முன்னதாக இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 8 வீரர்கள் தனி விமானம் மூலம் நாடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News