ஐபிஎல் 2021: சொந்த நாடு திரும்பும் தென் ஆப்பிரிக்க வீரர்கள்!
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் தங்கள் நாட்டிற்கு செல்ல அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 09 ஆம் தேதி தொடங்கியது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்களின்றி நடத்தப்பட்ட இத்தொடரில், வீரர்கள் பயோ பபுள் முறையில் தொடரில் பங்கேற்றனர்.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்றிருக்கு வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Trending
இதையடுத்து வீரர்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு திரும்ப தயாராகி வருகின்றனர். ஆனால் இத்தொடரில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாடு திரும்புவதில் இன்னமும் சிக்கல் நிலவி வருகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள தென் ஆப்பிரிக்க வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்ப அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து திரும்பும் வீரர்கள் அனைவரும் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என்பதையும் அந்நாட்டு அரசு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள தென் ஆப்பிரிக்க வீரர்கள், உதவியாளர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வர நாங்கள் முயன்று வருகிறோம். இருப்பினும் சொந்த நாடு திரும்பும் அனைவரும் தங்கள் வீடுகளில் கட்டாயம் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now