
IPL 2021: Virat Kohli, AB de Villiers react after Usain Bolt tweets in RCB jersey (Image Source: Google)
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான 14வது சீசன் ஐ.பி.எல். தொடர் நாளை தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் உலகின் அதிவேக மனிதரும், 8 முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான ஜமைக்கா நாட்டை சார்ந்த உசைன் போல்ட், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சியை அணிந்திருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஆர்சிபி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
மேலும் அவர் ஆர்.சி.பி. அணியின் கேப்டன் விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோரையும் டேக் செய்து, ‘சேலஞ்சர்ஸ் உங்களுக்கு நான் ஒன்றை தெரியப்படுத்துக்கிறேன். நான் இன்னமும் உலகின் வேகமான மனிதனாகத் தான் சுற்றிக் கொண்டிருக்கிறேன்’ என பதிவிட்டிருந்தார்.