Advertisement

மும்பை அணியின் அடுத்தடுத்த தோல்வி - ரோஹித் சர்மா வருத்தம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தது குறித்து அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெளிப்படையாக பேசியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 24, 2021 • 11:37 AM
IPL 2021: Was a good pitch, we failed to capitalise on start we got, says Rohit
IPL 2021: Was a good pitch, we failed to capitalise on start we got, says Rohit (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 34ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. 

இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதுடன், புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்திற்கு முன்னேறியது.

Trending


இந்நிலையில் இந்த இரண்டாம் பாதியில் மும்பை அணி தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. போட்டிக்குப் பிறகு தோல்வி குறித்து பேசிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,

“சில இடங்களில் நாங்கள் தவறாக செயல்பட்டு விட்டோம். இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக ஆரம்பித்திருந்தாலும் இறுதிநேரத்தில் ரன் குவிக்காமல் விட்டுவிட்டோம். இந்த மைதானம் ஒரு நல்ல பேட்டிங் மைதானம் தான். ஆனால் எங்களுக்கு கிடைத்த துவக்கத்தை நாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்றே கூறவேண்டும். அதேபோன்று இரண்டாவது இன்னிங்சில் பவுலிங்கிலும் நாங்கள் சரியாக தொடக்கத்தை தர முடியவில்லை.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இது போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடிய ஒன்றுதான். எங்கள் அணியில் தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்த பின்னர் அடுத்தடுத்து சிறிது இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்ததால் ரன்களை குவிக்க முடியாமல் போனது. இந்த போட்டியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்களே காரணம்” என தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement