
IPL 2021: We Played Smartly, Says PBKS Captain KL Rahul After Win Over KKR (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 45ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை குவித்தது.
அதன்பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல், “இந்த போட்டியில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெற்றது மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியில் நாங்கள் எந்தவித முயற்சியும் எடுக்காமல் ப்ராப்பர் கிரிக்கெட்டை விளையாடினோம். எங்கள் அணியில் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு தெளிவான ரோல் வழங்கப்பட்டது.