ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸில் இணையும் குர்பாஸ்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் அதிரடி வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸை குஜராத் டைட்டன்ஸ் அணி ஜேசன் ராய்க்கு மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இம்மாதம் 26ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. அதிலும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில் நடப்பாண்டு புதிதாக இணைந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி இங்கிலாந்தின் தொடக்க வீரர் ஜேசன் ராய்யை ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக ஜேசன் ராய் நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அவருக்கு மாற்று வீரரைத் தேடும் முயற்சியில் குஜராஜ் அணி களமிறங்கிவுள்ளது.
இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணியின் அதிரடி வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸை குஜராத் டைட்டன்ஸ் அணி மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது. இதனை குர்பாஸ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் உறுதிசெய்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now