ஐபிஎல் 2022: சஹால் ஹாட்ரிக்கால் ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் கேகேஆரும் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பட்லரும் படிக்கல்லும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவரில் 97 ரன்களை குவித்தனர். படிக்கல் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் சஞ்சு சாம்சன், அதிரடியாக ஆடிய பட்லருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அடித்து ஆடினார். சாம்சன் 19 பந்தில் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
Trending
அதிரடியாக ஆடி சதமடித்த ஜோஸ் பட்லர் 61 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இது பட்லருக்கு இந்த சீசனில் 2வது சதம். இதற்கு முன் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராகவும் ஒரு சதம் அடித்தார் சாம்சன்.
கடைசியில் ஹெட்மயர் 13 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 217 ரன்களை குவித்த ராஜஸ்தான் அணி, 218 ரன்கள் என்ற கடின இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்தது.
அதன்படி கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணியில் சுனில் நரைன் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் - ஆரோன் ஃபிஞ்ச் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் ஃபிஞ்ச் 25 பந்துகளில் அரைசதமும், 32 பந்துகளில் ஸ்ரேயாஸ் ஐரும் அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதனால் இப்போட்டியில் கேகேஆர் அணி எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்பின் 58 ரன்களில் ஆரோன் ஃபிஞ்ச் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
ஆனாலும் மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில், யுஸ்வேந்திர சஹால் வீசிய 17ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அடுமட்டுமில்லாமல் அடுத்து வந்த ஷிவம் மாவி, பாட் கம்மின்ஸ் ஆகியோரும் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்தனர்.
இதன்மூலம் யுஸ்வேந்திர சஹால் ஐபிஎல் தொடரில் தனது முதல் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ஆட்டத்தின் போக்கு முழுவது ராஜஸ்தான் அணி பக்கம் திரும்பியது.
ஆனால் அதன்பின் களமிறங்கிய உமேஷ் யாதவ், ட்ரெண்ட் போல்ட் வீசிய 18ஆவது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி என மொத்தம் 20 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
மேலும் கேகேஆர் அணி வெற்றிபெற கடைசி ஓவரில் வெற்றிபெற 11 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஒபேத் மெக்காய் வீசிய கடைசி ஓவரில் ஷெல்டன் ஜாக்சன் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து உமேஷ் யாதவும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்களை மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் யுஸ்வேந்திர சஹால் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now